கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி தீவிரப்படுத்த வேண்டும் என்ற மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் சோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .
மாவட்ட அதிகாரிகள் அவரவர் இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்றும், தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்ற அனைவரும் சோதனை செய்யப்படும். வேகமாக பரவும் பகுதிகளில் வசிப்பவர்கள் போக்குவரத்து துறை, சுற்றுலாத்துறை, கடைகள், ஹோட்டல்கள் மற்றும் சேவை மையங்கள் பணியில் முன்னுரிமை வழங்கப் படுகின்றது.
ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய இரு தினங்களில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.