நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்செந்தூர் நகராட்சி மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்கள் கூறுகையில், தோப்பூரில் இருந்து ஜீவாநகர் முடிய உண்டான சாக்கடை ஓடை அது ஒரு 12-வார்டு, 60% சதவீத வார்டுகள், தெருக்கள் அதில் சேருது. அந்த சாக்கடையை தெளிவுபடுத்தி, சுத்தப்படுத்தி அதை வந்து பெரிய ராட்சத குழாய்கள் வைத்து மூடி, அது குடியிருப்பு பகுதிக்கு நடுவில் வருகிறது, மூடி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மணப்பாடு பாலத்தில் விபத்து நடந்து 2 பேர் படுகாயமடைந்தார்கள். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து முக்கால் மணி நேரம் ஆச்சு, வாகனம் வருவதற்கு வழியும் இல்லை, ஒன்றும் இல்லை. மீன் வண்டியில் அவர்களை கொண்டு போய் உயிரை காப்பாற்றுவதற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் மருத்துவமனையில் ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது.
இந்த ஊரில் எங்கயுமே ஒழுங்கான குப்பைத்தொட்டிகள் கிடையாது, சரிவர சுத்தம் செய்வதற்கு ஆட்கள் கிடையாது, குடிநீர் வந்து எல்லா வார்டுக்குமே சரியாக ஒழுங்கு முறையாக செய்வதில்லை. தினசரி சந்தைகளின் இன்று வரையிலும் மழை வந்தால் மக்கள் நடமாடவே முடியாது.
பேருந்துகள் நிற்பதற்கு போதுமான இட வசதிகள் இல்லை, பயணிகளும் அமர்வதற்கு போதுமான இடம் இல்லாத நிலையில், இன்றைக்கு இந்த பேருந்து நிலையம் ரொம்ப சிறியதாக இருக்கிறது. இதையெல்லாம், கூடுதலான அளவில் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி அந்தந்த பேருந்துகள் எந்தெந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அதற்குண்டான தளத்தில் நிற்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
6 வார்டுகளில் உள்ள மொத்த பாதாள சாக்கடையும், விடுதிகள், திருமண மண்டபங்கள், கல்யாண லாட்ஜ்கள் இதிலுள்ள கழிவு நீர்கள் எல்லாமே ஒரே இடத்தில் கொண்டு வந்து பழைய குழாய் அதாவது, தெருக்களில் உள்ள குடிநீர் வடிகால்களில் சேர்க்கப்பட்டதனாலே பாதாளசாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது என அப்பகுதி மக்கள் விமர்சிக்கின்றனர்.