பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி புதிதாக திறக்க இருந்த குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வருகின்ற 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால் இந்த முடிவினை உயர்நீதிமன்றம் கைவிடக்கோரி வக்கீல்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 16-ஆம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்திலும், 19, 21-ம் தேதி வக்கீல்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி வக்கீல்கள் சங்கத் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில், வக்கீல்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற திறப்பதை உயர்நீதிமன்றம் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 27-ஆம் தேதி வரை அனைத்து நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் பணியில் இருந்து விலகி இருப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.