Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த மிட்டாய் வேண்டாம்… உடனே தடை பண்ணுங்க… தேனியில் பெற்றோர்கள் கோரிக்கை …!!

தேனி மாவட்டத்தில் சிறுவர்களை குறிவைத்து விற்கப்படும் மாத்திரை வடிவ மிட்டாய்களை தடை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துக்கள்ளனர். குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்கள் தற்போது தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, போடி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கடைகளில், மாத்திரை வடிவில் மிட்டாய்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இதன் வடிவமைப்பை பார்த்து குழந்தைகள் மிட்டாய் என்று நினைத்து வீட்டிலுள்ள மாத்திரைகளை சாப்பிட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே மாவட்டத்தில் வேறு எங்கும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மாவட்ட நிர்வாகம் இதுபோல் உள்ள மாத்திரை வடிவிலான மிட்டாய்களை கைப்பற்றி தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற மாத்திரை வடிவ மிட்டாய்களை எப்படி தயாரிக்க அனுமதிக்கிறார்கள் என்றும் கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |