Categories
தேசிய செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு அமல்….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் காவலர்கள் உச்சகட்ட உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதித்து தானே மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |