கேரளா மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் ஏழு நாட்களில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில், சில நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.