Categories
தேசிய செய்திகள்

இந்த மாநிலங்களில் மட்டும் அகவிலைப்படி உயர்வு…. அரசு ஊழியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது அகவிலைப்படி (DA) மற்றும் Dearness Relief (DR) உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாநிலங்களிலுள்ள அரசு ஊழியர்கள் இம்மாதம் சுதந்திர தினத்தையொட்டி சம்பள உயர்வை பெற்றுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரிலிருந்து குஜராத் வரை, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இம்மாதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது. இதையடுத்து ஊதிய உயர்வு ஏற்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்படும்.

அதன்படி 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சென்ற ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன் வாயிலாக 31 சதவீதத்தில் இருந்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதம்ஆக அதிகரித்தது. இந்நிலையில் மத்திய- மாநில அரசுஊழியர்களும் தங்களுக்கு அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது கிடைக்கும் என காத்திருக்கின்றனர். அத்துடன் இம்மாதத்தில் 4 அல்லது 5 % வரை அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா அரசு 3 சதவீதம் DA உயர்வு

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது (DA) இம்மாதம் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்விளைவாக அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தின் சதவீதம் ஆக 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் அரசு 6 சதவீதம் DA உயர்வு

# ஜூலை 4ம் தேதி சத்தீஸ்கர் அரசு 6 சதவீதம் அகவிலைப்படியை (DA) அறிவித்தது. இது மாநில அரசு ஊழியர்களுக்கு 28 சதவீதமாக இருக்கிறது. முதல்வரின் கூற்றுப்படி மிக சமீபத்திய உயர்வு, குறைந்தது 3.8 லட்சம் மாநிலஅரசு ஊழியர்களுக்கு உதவும்.

# முதல்வர் அலுவலகம் (CMO)படி, இந்த வருடம் மேமாதம் முதல் மாநில அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவின் கீழ் 22 சதவீத மற்றும் 6வ-து ஊதியக்குழுவின் கீழ் 174 சதவீத DA பெற்று வருகின்றனர். உத்தரவின் அடிப்படியில் அடுத்தடுத்த திருத்தங்களின் விளைவாக 7வது மற்றும் 6-வது ஊதியக்குழுக்கள் முறையே 6 சதவீதம் மற்றும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

# இந்த வருடம் ஆகஸ்ட் 1 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு 28 சதவீதம் மற்றும் 189 சதவீதம் DA வழங்கப்படும். இந்த உயர்வால் வருடத்திற்கு ரூபாய்.2,160 கோடி கூடுதல் செலவாகும்.

குஜராத் அரசு 3 சதவீதம் DA உயர்வு

ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபடேல், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்தார். இந்த அகவிலைப்படி அதிகரிப்பால் சுமார் 9.38 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் லாபம் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

 

Categories

Tech |