செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ கணேசன் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த விதத்திலும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்துகிறது.இருப்பினும் இதையும் மீறி குழந்தையை வேலைக்கு அமர்த்தினால் சட்டப்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் 203 சிறப்பு மையங்களில் 3 ஆயிரத்து 428 மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் படித்து வந்தனர். இதனிடையே கொரோனா காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களில் படித்த குழந்தைகள் கல்வி பெற இயலாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக தனி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இடைவிடாமல் கல்வி பயில வழி வகுக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.