Categories
ஆன்மிகம் இந்து

இந்த பொருளெல்லாம் உங்க வீட்டில வையுங்க… லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்… நல்லதே நடக்கும்…!!!

இந்து மதத்தில் லட்சுமி தான் செல்வத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். லட்சுமி தேவியின் அருள் இல்லாமல் எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது புராணங்களில் கூறப்படும் நம்பிக்கை. கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றுடன் லட்சுமிதேவியின் அருள் இருந்தால் ஒருவரின் முன்னேற்றம் மிகப்பெரியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். லட்சுமி தேவி வழிபாடு என்பது மிகவும் முக்கியம். உங்கள் வீட்டில் சில பொருட்களை வைத்திருந்தால் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் இருப்பால் என்று புராணங்கள் கூறப்படுகின்றது. என்ன பொருள் என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.

குபேரன் சிலை: குபேரன் சிலை வைப்பது லட்சுமி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கும். செல்வதை பாதுகாக்கும் கடவுளான, குபேரர் சிலையை வைக்கும்போது இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

சிறிய தேங்காய்: இந்த தேங்காய்கள் வழக்கமான தேங்காயை விட சிறியதாக இருக்கும். இது ஸ்ரீபால் என்று அழைக்கப்படும். அதற்கு லட்சுமி தேவியின் பலம் என்று பொருள். இந்த தேங்காய் வீட்டில் வைத்து வழிபடுவது லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கு சமமாகும்.

மெர்குரி சிலைகள்: மெர்குரி சிலைகளும். படங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இவற்றை உங்கள் வீட்டில் வைத்தால் லட்சுமிதேவியை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு சமம்.

சோழிகள்: இதனை வீட்டில் வைத்து விளையாடுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். உங்கள் வீட்டில் இதனை வைத்திருப்பது லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

வெள்ளி சிலைகள்: வெள்ளியால் செய்யப்பட்ட லட்சுமி சிலைகள் அல்லது பிள்ளையார் சிலைகள் அதிக நன்மைகளைத் தரக்கூடியது.

தாமரை கட்டா: தாமரையில் இருந்து கிடைக்கும் ஒரு வகை விதை இதுவாகும். லட்சுமி தாமரையில் வசிப்பவர். இந்த விதைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாலையை வீட்டில் வைத்திருப்பது லட்சுமி தேவியின் அருளை பெறுவதற்கு சமம்.

ஒரு கண் தேங்காய்: இந்த வகை தேங்காய்தான் பொதுவாக தாந்திரீக செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. மூன்று கண்களுக்கு பதிலாக இந்ததேங்காயில் ஒருகண்தான் இருக்கும். அதுதான் இதன் சிறப்பு.

Categories

Tech |