மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதா? என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, ரவை, கோதுமை, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.