Categories
தேசிய செய்திகள்

“இந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா”?…. ஆன்லைன் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு….!!!! 

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைக்காண கட்டணங்களை உயர்த்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி.  இந்த வங்கி மின்னணு பரிவர்த்தனைகளான நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவற்றுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இவை இரண்டும் மின்னணு பரிவர்த்தனைக்கு பயன்படுகின்றது. இதன் மூலமாக அனைத்து நாட்களும் நாம் பணத்தை அனுப்ப முடியும்.

இந்நிலையில் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் பற்றி பார்க்கலாம்.

அதன்படி,

ஆர்டிஜிஎஸ் :  வங்கிக் கிளையில் நேரடியாக ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கான கட்டணம் 24.50 ரூபாயாகவும், ஆன்லைனி ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கு 24 ரூபாயாகவும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் பொருந்தும்.

நெஃப்ட் : நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை பொறுத்தவரை, 10,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 2.25 ரூபாயாகவும், 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 4.75 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 14.75 ரூபாயாகவும், 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 24.75 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

Categories

Tech |