Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த பயிர்கள் நீண்ட காலம் பயன் தரும்….. அதிரடியாக ஆய்வு செய்த வேளாண்மை துறை இயக்குனர்….. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை…..!!!!

விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகாப்பாடி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். இதில் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி  தரிசு நிலமாக உள்ள விவசாய நிலத்தில் புதிதாக உருவாக்கி உள்ள நீர் ஆதாரத்தை பயன்படுத்தி நீண்ட காலம் பயன் தரும் மா, கொய்யா, எலுமிச்சை போன்றவற்றை நடவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்பின்னர் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளார். மேலும்  மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு விவசாய தரிசு நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |