வலிமை திரைப்படம் குறித்து நடிகர் அஜித்குமார் கூறியுள்ளதை இயக்குனர் வினோத் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் H.வினோத், அஜித், போனி கபூர் இவர்களின் இரண்டாவது கூட்டணி “வலிமை” திரைப்படமாகும். வலிமை திரைப்படமானது மூன்று வருடங்களாக உருவாகிக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தை பற்றி அஜித் கூறியுள்ளதாக வினோத் கூறுவதாவது, “இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இதை எனது அம்மா அப்பாவுடன் சேர்ந்து இத்திரைப்படத்தை பார்ப்பேன் என்று அஜித் தன்னிடம் கூறினார். முழுமையாக ஆக்ஷன் திரைப்படமாக இல்லாமல், ஒரு குடும்பப் படமாக இருக்கும் என்றும், பல குடும்பங்கள் சந்திக்கும் சமூக பிரச்சனை பற்றி வலிமை பேசியுள்ளது” என வினோத் குறிப்பிட்டுள்ளார்.