தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களில் மழைநீர் வைத்துள்ளதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதனை சீரமைக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் -நாகர்கோவில் பிரிவில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே செல்லும் சிறப்பு ரயில்கள், கொல்லம் – திருவனந்தபுரம் இடையே செல்லும் ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கொல்லம் -எழும்பூர், நாகர்கோவில் – மங்களூரு, கன்னியாகுமரி- பெங்களூர் உள்ளிட்ட சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.