இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்று சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
உலக நாடுகளில் பல நாட்டை சேர்ந்த பெண்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் அந்த பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது பல நாடுகளில் நடந்து தான் வருகின்றது. ஆனால் சவுதி அரேபியா நாட்டில் வித்யாசமான தடையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், சாட், மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பெண்கள் சவுதி அரேபியாவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த நான்கு நாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபியாவை சேர்ந்த ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மீறி திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.