கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனுடனான எல்லைக்கு அருகில் 1,00,000-க்கும் மேற்பட்ட படைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly உக்ரேனிய இறையாண்மைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக உக்ரைனின் தலைநகரான Kyiv-க்கு அடுத்த வாரம் செல்ல உள்ளார்.
மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Melanie Joly, ரஷ்யா நாடு உக்ரைன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது படைகள் மற்றும் ஆயுதங்களை குவிப்பது ஒட்டு மொத்த நாட்டுடைய பாதுகாப்பையும் பாதிக்கிறது. எனவே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், சர்வதேச ஒழுங்கை நிலை நிறுத்தவும் கனடா அதன் சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.