தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னையில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்ததால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 9 வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்த இயலாத சென்னைவாசிகள் 044-25384520 , 044-46122300 ஆகிய எண்களுக்கு கால் செய்து பதிவு செய்தால் நேரடியாக வீட்டிற்கே வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள், மழையால் தடுப்பூசி மையத்துக்கு செல்ல இயலாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.