காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கொண்டுவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் கொரோனாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல் மற்றும் வெளியே சென்றால் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றவும் அரசாங்கம் வலியுறுத்தியது.
இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் துறையினுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் கோவிலான இறவாதிஸ்வர், முத்தீஸ்வரர் உட்பட 7 கோவில்களும் மே 15 ஆம் நாள்வரை மூடியிருக்கும் என அறிக்கையிடப்பட்டுள்ளது.