Categories
மாநில செய்திகள்

இந்த துறையில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக முதல்வர் அவர்கள் வேளாண் பெருமக்களின் உயர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-2022 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இரண்டு முறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேளாண் துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த வித தொய்வும் இல்லாமல் நடைபெற வேண்டியது உள்ளதாலும், தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதாலும் மாவட்டம் மற்றும் வட்டார அளவிலுள்ள வேளாண் அதிகாரிகளின் காலி பணியிடங்களில் நிரப்ப ஆணை ஆனது பிறப்பிக்கப்பட்டது. தற்போது வேளாண்மை துறையில் 23 துணை வேளாண் இயக்குனர்கள் வேளாண்மை இணை இயக்குனர்களாகவும், 40 வேளாண்மை அலுவலர்கள் வேளாண்மை உதவி இயக்குனர்களாகவும் பதவி உயர்வும் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |