காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு-போளூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை தலைவர் அன்பழகன், தசரதன், நகர, வட்டார நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , இளைஞர் அணி பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.