பிரபல நாட்டில் புதிய பிரதமரின் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானியா நாட்டில் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றார். ஆனால் இவர் நாட்டில் எண்ணெய் , எரிவாயு எடுப்பதற்கு உரிமை கோரியுள்ளார் . இது நாட்டு மக்களிடையே போராட்டத்தை தூண்டியுள்ளது. இந்நிலையில் லண்டன், நாட்டிங்கான், மான்செஸ்டர் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லண்டன் நகரில் காலநிலை ஆர்வலரான ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றுள்ளனர். எனினும் செய்தியாளர் அவர் முன் மைக்கை நீட்டியபோது அவர் பிரதமரின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. நான் என் மக்களுக்காக இதை செய்கிறேன். காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கத்தின் செயலற்ற தன்மை நாம் அனைவருக்கும் மரண தண்டனை. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபை நமக்கு புதிய எண்ணெய் வேண்டாம் என கூறியுள்ளது. ஆனால் லிஸ் ட்ரஸ் 130 புதிய எண்ணெய் உரிமைகளை வழங்க விரும்புகிறார். அது இந்த கிரகத்திற்கு மரண தண்டனை என அவர் கூறியுள்ளார்.