Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறாரா தோனி?…. சிஎஸ்கே நிர்வாகி சொன்ன முக்கிய தகவல்….!!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே நிர்வாகம், “ஜடேஜாவிடம் தோனிதான் விருப்பப்பட்டு கேப்டன்ஸியை ஒப்படைத்தார்” என்று தெரிவித்துள்ளது. இந்த சீசனோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் இந்த விவகாரம் தொடர்பில் பேசியுள்ளார்.

விஸ்வநாதன் அளித்த பேட்டியில், “இல்லை, இந்த சீசனோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூற முடியாது. நிச்சயமாக அடுத்தடுத்த ஆட்டங்களில் அவர் தொடர்ந்து விளையாடுவார். நாங்கள் தோனியின் முடிவுக்கு எப்போதும் மதிப்பளிப்போம். சிஎஸ்கேவின் தூண் தோனி தான். இவர்தான் ஜடேஜாவை வழிநடத்துவார். அதோடு மட்டுமில்லாமல் தோனி மற்ற வீரர்களையும் வழிநடத்துவார். தோனி, ஜடேஜாவை வளர்த்து விடுவதற்காக தான் அவரிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்துள்ளார். எப்போதும் தோனிக்கு சிஎஸ்கே மீது அக்கறை உண்டு. இந்த முடிவினை சிஎஸ்கேவின் நலன் கருதி அவர் எடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |