Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த காரில் என்ன இருக்கு?…. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தளி சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆதவன் என்பதும், சட்டவிரோதமாக காரில் கஞ்சா, குட்கா, பான்மசாலா, மது பாட்டில்கள் போன்றவற்றை கடத்தி வந்ததும்  தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் ஆதவனை  கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரில் இருந்த ஒரு லட்சத்தி 25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, 2 ஆயிரத்தி 400 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Categories

Tech |