Categories
லைப் ஸ்டைல்

இந்த ஏலக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா…? இனியாவது தெரிஞ்சுக்கோங்க…!!!

ஏலக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல் நலக் குறைபாடுகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் உடையது. எனவே இதை நம்முடைய உணவில் சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்ப்பதால் உடலுக்கு பல்வேறு தீமை விளைவிக்கும்.

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு செரிமானம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சினைதான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் போய்விடும். பசிக்கவில்லை அல்லது சாப்பிட பிடிக்கவில்லை என்று உங்களுக்கு இருந்தால் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

நறுமணம் நிறைந்த ஏலக்காய் நம் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. சளி வறட்டு இருமல் பாதிக்கப்படுபவர்கள் ஏலக்காயையும் மிளகையும் ஒன்றாக தட்டி பாலில் போட்டு குடித்து வர வறட்டு இருமல் சரியாகும். அஜீரண கோளாறு இருந்தால் நெய்யில் ஏலக்காயையும மிளகையும் வறுத்து பொடியாக்கி சாப்பிட அஜீரணக் கோளாறு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.

பாலை சுடவைத்து இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் இருபாலருக்கும் கருவள குறைபாடுகள் நீங்கும். இத்துடன் கொஞ்சம் ஏலக்காய்த் தூள் பயன் படுத்தினால் போதும். நெஞ்சில் சளி உள்ளவர்கள், இருமல் மாறும் வயிற்று வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏலக்காய் அற்புதமான மருந்தாக செயல்பட்டு நல்ல பலனைக் கொடுக்கிறது.

Categories

Tech |