Categories
தேசிய செய்திகள்

இந்த இடத்தில “சார், மேடம்” வார்த்தைய பயன்படுத்த தடை… பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!!

சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பஞ்சாயத்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளை சார் மேடம் என்று அழைப்பது வழக்கம். ஆனால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி இருக்கின்றது கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம் ஆத்தூர் பஞ்சாயத்து அலுவலகம். இந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் யாரும் சார் மேடம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது. காங்கிரஸ் ஆளும் இந்த பஞ்சாயத்தில் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர்.

இதன்மூலம் பொதுமக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே இடைவெளி நீங்கும். அதுமட்டுமில்லாமல் பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் யாரும் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பெயர்களை கூறியோ அல்லது பதவியை வைத்து அழைத்தால் போதுமானது. வயதுக்கு முகவர்களாக இருக்கும்பட்சத்தில், அப்படி அழைப்பது அசௌகரியமாக தெரிந்தால் சேட்டன் சேச்சி அதாவது தமிழில் அண்ணா, அக்கா என்று அழைக்கலாம். அதேபோல விண்ணப்ப படிவம் என்பதற்கு பதிலாக உரிமை சான்றிதல் என மாற்றம் செய்யவும் பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Categories

Tech |