வருகிற 22-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை வருகிற 22-ஆம் தேதி கூட்டபோவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை விடுவார் எனவும், கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நெறிமுறையை இந்த ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடரின் போது பின்பற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் இரு தவணையும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும், பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பணியாற்றிவரும் உறுப்பினர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் எனவும், அனைத்து எம்பிக்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பெரும்தொற்றால் ஏற்பட்ட பேரிடருக்கு பின் கூட்டப்படும் நான்காவது அமர்வு இதுவாகும். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூலை மாதம் மழை கால கூட்டத் தொடரும் நடைபெற்றது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் தொற்று உள்ளிட்ட காரணங்களால் இவை சரிவர நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.