மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 99.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.90 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து வினாடிக்கு 26,102 கன அடியிலிருந்து 27,212 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.71 டிஎம்சி ஆக உள்ளது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து மொத்தம் 14,900 நீர் வெளியேற்றப்படுகிறது.மேலும் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி இருப்பதால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.