Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த ஆசை நிறைவேறுமா…? மதுரைக்கார பெண் என்றால் OK…. விஷால் ஓபன் டாக்…!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ‘லத்தி’ பட புரமோஷனுக்காக மதுரை சென்ற நடிகர் விஷாலிடம் திருமணம் குறித்து அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், மதுரை தனக்கு மிகவும் ராசியான இடம். இங்கிருக்கும் பெண் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. குறிப்பாக உங்கள் முன்னிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இது நடக்க வேண்டும் என்று கூறினார். விஷாலின் இந்த ஆசை நிறைவேறுமா?

Categories

Tech |