Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்…. பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட கொட்டகைகள்…. கலந்து கொண்டு அதிகாரிகள்….!!!

 ஏரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள்  பொக்லைன் இயந்திரம்  மூலம் அகற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூவனூர் பகுதியில் பாக்கம் என்ற  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து வருகின்றனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு  மனோகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜராஜன், மண்டல துணை வட்டாட்சியர் முத்துக்கனி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். இதனால பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |