Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில்….. 7.6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை!!

இந்தோனேசியாவின் மெளமரே அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மெளமரே அருகே 7.6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மெளமரே என்ற இடத்திலிருந்து வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |