இந்து முன்னணி மாநில நிறுவன தலைவர் ராமகோபாலனின் பிறந்த நாளை இந்து எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த தினத்தை இந்து எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடியுள்ளனர். இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு, நகர தலைவர் கருப்பையா, ஒன்றிய தலைவர் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் பலரும் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் விழாவில் பங்கேற்றவர்கள் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் முன்பு வைக்கப்பட்ட ராமகோபாலன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையை செய்துள்ளனர். இதனைதொடர்ந்து தேனியில் இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ராமகோபாலன் உருவப்படம் வைத்து மரியாதை செலுத்திய நிலையில் கொப்பயம்பட்டியில் இந்து முன்னணி அன்னையர் சங்கம் சார்பில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர்.