காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகின்றார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் முடிவடைகின்றது. இந்நிலையில் ஒற்றுமை பாத யாத்திரையில் நேற்று ராஜஸ்தான் ஆழ்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உலக மக்களிடம் பேச இந்தி பயன்படாது எனவும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் உலகின் மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால் இந்தி ஒருபோதும் உங்களுக்கு பயன்படாது, ஆங்கிலம் தான் அந்த இடத்தில் உங்களுக்கு பயன்படும், எனவே அனைவரும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் இதுதான் உங்களுக்கும் நல்லது என அவர் கூறியுள்ளார்.