Categories
மாநில செய்திகள்

இந்தி தெரியாது போடா…. ”மகிழ்ச்சியளிக்கிறது” கனிமொழி எம்.பி, டுவீட்…!!

இந்தி தெரியாது போடா என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தி மொழிக்கு எதிரான சில வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை திரையுலகப் பிரபலங்கள் சிலர் அணிந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் Indian’ என அச்சிடப்பட்டுள்ள டி.சர்ட்டை அணிந்திருக்கிறார். அவள் அருகில் நின்று கொண்டிருக்கும் மெட்ரோ படத்தின் ஹீரோ, ” இந்தி தெரியாது போடா…” என்ற வாசகம் எழுதிய டிசர்ட்டை அணிந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா ஆகிய இருவரும், ‘I am a தமிழ் பேசும் Indian’ , இந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்துள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்தி தெரியாது போடா என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் பிரபலமாகியுள்ளது. அதே சமயத்தில் திரைப்பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் பெரும்பாலானோர் இது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட் அணிந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” ஒரு சிறிய தீப்பொறி இன்று காட்டுத்தீயாக மாறியுள்ளது. இந்தி திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்ட போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களிடம் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தலைமுறையும் மொழி உணர்வின் சளைத்ததல்ல என்று இளைஞர்கள் காட்டியுள்ளனர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |