Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தி தெரியாது போடா… “தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை”… எம்பி கனிமொழி ஆவேச ட்விட்!!

இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்..

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவை முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவன முகவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.. இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்.. இந்தி மொழி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என முகவர் பதிலளித்துள்ளார்.. அந்தச் செய்திகள் #Reject_zomato ஹேஸ்டேக் மூலம் தற்போது இணையத்தில் பலராலும் பரப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.. மேலும்  #Hindi_Theriyathu_Poda என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்..

https://twitter.com/KarthikSubbur11/status/1450280818732011523

 

Categories

Tech |