Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பு எதிரொலி!… திமுக நிர்வாகி இறப்பு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!!

சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்து இருக்கிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை இவர் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டவாறு தாழையூர் தி.மு.க அலுவலகத்துக்கு வந்தார். பின் அங்கு அவர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனே அருகிலிருந்தவர்கள் ஓடிசென்று அவரை காப்பாற்ற முயன்றனர். எனினும் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம். போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |