Categories
தேசிய செய்திகள்

“இந்திரா காந்தி எமெர்ஜென்சியை விதித்து ஜனநாயக உரிமையை பறித்தார்” காங்கிரஸ் மீது ரவிசங்கர் பிரசாத் கடும் சாடல்….!!!

பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார்.

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வு, அத்தியாவசிய  பொருட்களின் விலைஉயர்வு போன்றவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தி பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது எனவும், அதை நாடு முழுவதும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர் என கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பாஜக ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெட்கக்கேடான வார்த்தைகளை கூறுகிறார் என்றார். ராகுல் காந்தியின் பாட்டி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தான் எமர்ஜென்சியை அறிவித்து இந்திய மக்களின் ஜனநாயக உரிமையை பறித்தார். மக்கள் உங்களை நிராகரிக்கும் போது நீங்கள் எதற்காக ஜனநாயகத்தை பற்றி பேசுகிறீர்கள் என்றும், உங்களுடைய கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் நேஷனல் ஹொரால்டு பத்திரிகை விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் பிறகு நேஷனல் ஹொரால்டு பத்திரிகையின் ரூபாய் 5000 கோடி மதிப்பிலான சொத்துக்களை யங் நிறுவனம்  நிறுவனம் 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது எப்படி என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மீதான ஊழல் வழக்குகளை மறைப்பதற்காக மட்டுமே தற்போது போராட்டம் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |