Categories
மாநில செய்திகள்

இந்திய ஹாக்கி அணிக்கு ரூ.10 லட்சம் பரிசு…. அன்புமணி அறிவிப்பு…!!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி சார்பில் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனை கண்ணீர் விட்டு அழுதது மிகவும் வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டியில் அவர்கள் தோற்று இருக்கலாம். ஆனால் இந்தியர்களின் இதயங்களை அவர்கள் வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பாமக சார்பாக ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |