கொழும்பில் இன்று இந்தியா – இலங்கை இடையே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 இந்திய அணியினர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் நாளை இலங்கை மற்றும் இந்தியா மோதும் 2வது டி20 போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.