Categories
தேசிய செய்திகள்

இந்திய விமானப்படை… 88வது ஆண்டு தின விழா இன்று… வீரர்கள் கோலாகல கொண்டாட்டம்…!!!

இன்று கொண்டாடப்படும் இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை வீரர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை படைவீரர்களுக்கு தெரிவித்தனர். மேலும் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு உத்திர பிரதேசத்தில் இருக்கின்ற ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் சில சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.

அந்த நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையில் இருக்கின்ற பல்வேறு ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை பல்வேறு செயல்களில் ஈடுபட்டன. அதிலும் சில வீரர்கள் ஹெலிகாப்டர்களில் உயரத்தில் பறந்து வானில் வலம் வந்தன. மேலும் சில விமானங்கள் வானில் பறந்து சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தின. அதிலும் குறிப்பாக ரபேல் போர் விமானம் ஹாக்கி மைதானத்தை விட மிக சிறிய பரப்பளவு கொண்ட பகுதியில் வானில் 8 எண் வடிவில் சுற்றிவந்து பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Categories

Tech |