அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடன் இந்திய வம்சாவளி பெண்ணான ரச்சனாவை மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறையில் துணை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரச்சனா சச்தேவா பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் முதன்மை அதிகாரியாக பணியாற்றி அனுபவம் உள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் மும்பையில் அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் ரச்சனாவை மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்துள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபை அளிக்க வேண்டும்.