எல்லையில் அத்துமீறும் இந்திய ராணுவம் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் இருக்கின்ற இந்திய தூதரக உயர் அதிகாரிக்கு நேற்று ஒரு சம்மன் அனுப்பி அவரை வரவழைத்துள்ளது. அதன் பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவம் போர் நிறுத்தத்தை அத்துமீறி பயங்கர தாக்குதல் நடத்தி வருவதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று ரக்சிக்ரி பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில் ஒரு அப்பாவி படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளது.
இந்த வருடம் மட்டும் 158 தடவை இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் அதனால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் இந்திய ராணுவம் எல்லையில் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.