Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் அதிரடி… 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…. ஆயுதங்கள் பறிமுதல்!!

ஜம்மு காஷ்மீர் ஊரி பகுதி அருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்..

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள ராம்ப்பூர் அருகே காடுகள் நிறைந்த பகுதியில் இன்று காலையிலே 6 தீவிரவாதிகள் கொண்ட குழு ஊடுருவ முயன்றதை கண்டறிந்து அவர்களை சுற்றிவளைத்து இராணுவத்தினர் தாக்கியதில் அந்த இடத்தில் 3 தீவிரவாதிகள் மரணமடைந்தனர். மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை விட்டுவிட்டு மற்ற 3 தீவிரவாதிகள்  காட்டுப் பகுதியில் ஓடி ஒளிந்து கொண்டனர்.. அந்த தீவிரவாதிகளை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதையடுத்து மரணமடைந்த 3 தீவிரவாதிகளிடம் இருந்து 70 கையெறி குண்டுகள், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 8 துப்பாக்கிகள் (பிஸ்டல்) வெடிபொருட்கள் கண்டறியப்பட்டன.. அதில், இறந்த ஒரு தீவிரவாதியிடம் இருந்து பாகிஸ்தான் நாட்டு நாணயங்கள், ரூபாய் தாள்கள் இருந்ததாகவும் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது..

ஒரு பக்கம் பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், நல்லுறவு என்பதற்கு நேர் எதிர்மாறாக தீவிரவாதிகளை ஊடுருவ அனுமதித்து கொண்டிருக்கிறது..

Categories

Tech |