Categories
உலகசெய்திகள்

“இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிக்கும் நடவடிக்கை தொடக்கம்”…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கு பல்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் அவர்கள் சீனா சென்று தங்கள் படிப்பை தொடர முடியாது நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மாணவர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என சீனாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் காலதாமதம் ஆகி வந்தது. அதே சமயம் ரஷ்யா இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மாணவர்கள் கடந்த சில நாட்களாக சீனா சென்று வருகின்றார்கள்.

இந்த நிலையில் இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிக்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் இதன் மூலமாக இந்திய மாணவர்கள் அடங்கிய முதல் குழு விரைவில் சீனா வந்து விடுவார்கள் எனவும் சீன அரசு அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பேசும்போது, வெளிநாட்டு மாணவர்கள் சீனாவிற்கு திரும்புவதற்காக நாங்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்திய மாணவர்களை திரும்ப சேர்த்துக் கொள்வதற்கான செயல்முறையும் தொடங்கி இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறியவர் சீனா தற்போது தங்கள் கல்லூரிகளில் மீண்டும் சேர்வதற்காக நாடு திரும்ப விரும்பும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிப்புக்காக உடனடியாக சீனா திரும்ப விரும்பும் மாணவர்களின் பட்டியலை சீனாவிற்கு இந்தியா வழங்கி உள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு இடையே கொரோனா தொற்று காரணமாக இந்தியா சீனா இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான போக்குவரத்தையும் மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை இது நாடுகளும் தொடங்கி விட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Categories

Tech |