Categories
தேசிய செய்திகள்

இந்திய நாட்டின் ஜனநாயகம் இறந்துவிட்டது… ராகுல்காந்தி வருத்தம்…!!!

இந்தியாவில் ஜனநாயகத்தை பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி வந்துள்ளார். அவர் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்களுடன் வஉசி கல்லூரியில் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இதே கல்லூரிக்கு கடந்த 1959 ஏப்ரல் 16-ஆம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வருகை தந்தார். அதனைப்போலவே 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திராகாந்தி வருகை தந்தார்.

இந்நிலையில் அங்கு பேசிய ராகுல் காந்தி, நம் இந்திய நாட்டின் ஜனநாயகம் இறந்துவிட்டது. அதற்கு காரணம் RSS போன்ற இயக்கம், பெரிய நிதி அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய பொதுத்துறை நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியும் என யார் நினைத்தாலும் அது என்றும் முடியாது என்பதை வரலாறு பலமுறை உணர்த்தி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |