இந்திய தபால் துறை மூலம் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் மோசடி கும்பல்கள் மூலம் போலியான தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் தபால் துறை சார்பில் குலுக்கல் முறையில் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த செய்திகள் போலியானது என்று எச்சரிக்கை வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம், மெசேஜ்கள் வாயிலாக போலியான URL லிங்குகள் பகிரப்படுவதாகவும், அதனை நம்பி பொதுமக்கள் தங்களின் தகவல்களை பகிர வேண்டாம் எனவும் தபால் துறை தெரிவித்துள்ளது. ஆகவே சந்தேகத்திற்கு உரிய அடிப்படையில் அழைப்புகள் (‘அல்லது) மெசேஜ்கள் வந்தால் தபால் நிலையத்தை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.