இந்திய-சீன எல்லையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள குரு குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர் அப்போது கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் 19 தொழிலாளர்களை காணவில்லை. இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது ஒருவரின் உடல் மட்டும் இந்திய-சீன எல்லையை ஒட்டிய தமின் பகுதியில் புராக் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களின் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். எனவே அவர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட கடந்த ஜூலை 5ஆம் தேதி அவர்கள் பணியிடத்தை விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.