இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தின் கட்ச் பகுதியில் ஹரமி நல்லா கடற்கழி என்னும் பகுதி அமைந்திருக்கிறது. எல்லை தாண்டி அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இப்படி அத்துமீறி நுழைவதை வழக்கமாகக் கொண்டிருப்பதனால் எல்லை பாதுகாப்பு படையினர் இந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு கூட பாகிஸ்தான் நாட்டு மீனவர்களின் 9 படகுகள் குஜராத் பகுதி கடலில் சுற்றிக் கொண்டிருந்தது.
உடனடியாக இவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். மேலும் படகில் இருந்த பல மீனவர்கள் கடலில் குதித்து தப்பி ஓடி உள்ளனர். அவர்களை இரண்டு பேரை மட்டும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் போர்க்கப்பல் நுழைந்து விட்டது. இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு இந்திய கண்காணிப்பு விமானம் பாகிஸ்தான் போர்க்கப்பலில் இருப்பிடம் பற்றி எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல் அதன் பகுதிக்கு திரும்பும் படி வலியுறுத்தியுள்ளது. ஆனால் டோர்னியர், ஆலம்கீர் மீது வட்டமிட்டு கொண்டே இருந்ததாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் போர்க்கப்பல் எப்படி அத்துமீறியதற்கான நோக்கத்தை தெரிந்து கொள்வதற்காக வானொலி மூலம் இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் கோல் கேப்டனுடன் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அதற்கு அவர் எந்தவிதமான பதிலையும் கூறவில்லையாம்.
இதனை அடுத்து டோர்னியர் விமானம் மூன்று முறை பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு முன்னால் பறந்து வந்து வார்னிங் தந்து கொண்டே இருந்துள்ளது. இதனை அடுத்து பின்வாங்கிய ஆலம்கீர் பாக்கிஸ்தான் பகுதிக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின்றது. அதேபோல இந்த கட்சி மாவட்டம் ஹாரமி நாலாவில் உள்ள இந்தியா பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதியில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் நாட்டுப் படகில் இருந்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 12 துப்பாக்கிகளை சில தினங்களுக்கு முன் கண்டுபிடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் வழக்கமாக மீனவர்கள் துப்பாக்கிகள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் போர் விமானம் நுழைந்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.