Categories
தேசிய செய்திகள்

இந்திய ஏலக்காய் ஏற்றுமதிக்கு தடை….. உள்நாட்டு சந்தையில் விலை சரிவு….!!!!

இந்திய ஏலக்காய் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், உள்நாட்டு சந்தையில் விலை சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏலக்காயின் தேவை அதிகரித்தாலும், உள்நாட்டில் விலை குறைந்துள்ளது. ஏலக்காய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், உள்நாட்டு சந்தையில் விலை சரிந்துள்ளது. அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் மற்றும் சாப்பிடக்கூடாத நிறத்தை காரணம் காட்டி வெளிநாடுகள் இந்தியாவில் ஏலக்காய்க்கு தடை விதித்துள்ளன. ஏலக்காயின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இருந்த சவுதி அரேபியாவிற்கும் ஏலக்காய் ஏற்றுமதி ஆபத்தில் உள்ளது. சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தில் சோதனைக்குப் பிறகு ஒப்புதல் பெற்ற பின்னரே சவுதிக்கான ஏற்றுமதியை மீண்டும் தொடங்க முடியும்.

சவுதி அரேபியா தவிர ஈரான், ஈராக், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவில் இருந்து ஏலக்காயை இறக்குமதி செய்தன. இயற்கை விவசாயத்தில் விளையும் பொருட்களையே வெளிநாடுகள் விரும்புகின்றன. இதற்கிடையில் தான்சானியா சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஆர்கானிக் ஏலக்காயை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. தான்சானியா ஏலக்காய் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரகம் போலவே இருப்பதால் இது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கலாம்.

Categories

Tech |