Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைந்த மர்ம நபர்… சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்… அதிரடி நடவடிக்கை…!!!!!

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் ராம்கர் செக்டர் பகுதி சர்வதேச எல்லை வழியாக மர்ம நபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் சர்வதேச எல்லையை  கடந்த பின் இந்திய எல்லை வேலிகளை தாண்ட முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கையை மீறி நுழைந்த அந்த மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். மேலும்  எல்லை பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |