மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஆட்டோவில் வாசகம் ஒட்டப்பட்டது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சென்னையை சேர்ந்த ஒருவர் தனது ஆட்டோவில் “பட்ஜெட் சிறு குறு தொழில் முனைவோருக்கு ஏமாற்றம். கார்பெட் நிறுவனங்களுக்கு 12 சதவீதம் வரியில் இருந்து 7 சதவீதமாக சலுகை. சொந்த மக்களிடம் அதிக வரி வசூலித்ததாக பெருமைபடுவது.
வரி வருவாய் அதிகம் இருக்கிறது. ஆனால் பொதுத்துறை மிக மிக குறைந்த விலையில் விற்கத் துடிப்பது ஏன்..? யார் நலனில் அக்கறை.. மக்களே சிந்திப்போம்” என்று எழுதப்பட்டுள்ளது.. இந்த வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.